தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹாரி தங்கள் பாதுகாப்புக் கட்டணத்தை தாங்களே செலுத்துங்கள் - ட்ரம்ப் - இளவரசர் ஹாரிக்கு டிரம்ப் மெசேஜ்

வாஷிங்டன்: கலிஃபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி-மெகன் தம்பதிக்கான பாதுகாப்புக் கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Trump about harry
Trump about harry

By

Published : Mar 30, 2020, 1:16 PM IST

Updated : Mar 30, 2020, 1:23 PM IST

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹாரியும்-மெகனும் சுதந்திரமாக இருக்க விரும்பியதால் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்தனர். பின்பு இங்கிலாந்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்து, கனடா நாட்டுக்குச் சென்றனர்.

தற்போது கனடாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் குடியேறியுள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "நான் இங்கிலாந்து ராணியின் சிறந்த நண்பராவேன். ஹாரியும்-மெகனும் அரச குடும்பத்தை விட்டுவிட்டு கனடாவில் நிரந்தரமாக வசிப்பார்கள் எனக் கேள்விப்பட்டேன். தற்போது கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும். அமெரிக்க அரசு செலுத்தாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பருவநிலை மாற்றம் குறித்து ட்ரம்பிற்கு எதிராக ஹாரி டெலிபோனில் பேசியதாக அண்மையில் ஒரு வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வூகான் நகருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Last Updated : Mar 30, 2020, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details