தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை - ட்ரம்ப் தகவல் - டிக்டாக்

வாஷிங்டன்: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

US bans tiktok
US bans tiktok

By

Published : Aug 1, 2020, 12:34 PM IST

இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து.

இந்தியாவைத் தொடர்ந்து வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

குறிப்பாக, அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தக போர் காரணமாக அமெரிக்காவில் விரைவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் பரவியது.

தற்போது டிக்டாக் செயலி சீன நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் கீழ் உள்ளது. அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர வேண்டும் என்றால் அச்செயலியை பைட் டான்ஸ் நிறுவனம் விற்க வேண்டும் என்ற அமெரிக்கா உத்தரவிடவுள்ளதாக புளும்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "நாங்கள் டிக்டாக் செயலி குறித்த ஆலோசனை செய்துவருகிறோம். விரைவில் நாங்கள் டிக்டாக் செயலியை தடை செய்யலாம்.

வேறு சில விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்துவருகிறோம். தற்போது இரண்டு விஷயங்கள் குறித்து ஆலோசித்துவருகிறோம். எனவே, என்ன நடக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, சீனா அரசுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சீனா அரசு கேட்டாலும் பயனாளர்கள் தகவல்களை அளிக்க மாட்டோம் என்றும் டிக்டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் வகையில் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் உயர் அலுவலரை டிக்டாக் செயலி தலைமை நிர்வாக அலுவலராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அமெரிக்கா சீன செயலி தடை செய்வது குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறது. முன்னதாக, டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "நாங்கள் ஆதிக்கம் செலுத்துகிறோமா? நிச்சயம் இல்லை" - ஆப்பிள் சிஇஓ

ABOUT THE AUTHOR

...view details