வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் போலியானவை எனவும், அவர் குறித்து வெளியான செய்திகள் பழைய தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவித்தார்.
கிம் உடல்நிலை குறித்து அமெரிக்காவின் சி.என்.என். நிறுவனம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில்தான் இந்தச் சர்ச்சை உருவான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வதந்திகளை மறுத்துள்ளார்.