தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா பரிசோதனை அதிகரிப்பு : ட்ரம்பை பாராட்டிய மோடி! - கரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு

வாஷிங்டன் : உலக அளவில் அதிக கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பாராட்டியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump-says-modi-praised-him-over-covid-19-testing
trump-says-modi-praised-him-over-covid-19-testing

By

Published : Sep 14, 2020, 5:02 PM IST

நேற்று முன்தினம் (செப்.12) இரவு, நெவாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

அப்போது, "நாம் இந்தியாவைவிட அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். மற்ற பிற நாடுகளை விடவும் அதிக அளவு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். 44 மில்லியன் சோதனைகளுடன் நான் முதலிடத்தில் உள்ளோம்.

இது தொடர்பாக என்னுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”கரோனா பரிசோதனைகள் மூலம் உங்களை நிரூபித்துள்ளீர்கள்” என்றார். இது என்னுடைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களுக்கு நான் அளிக்கும் விளக்கம் என நான் அவரிடம் தெரிவித்தேன்.

'சீனா வைரஸ்' வந்தபோது ஜோ பிடன் பொறுப்பில் இருந்திருந்தால், இன்னும் நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களை பெருக்குவதிலும் நெவாடா முக்கியப் பகுதியாக இருக்குமென சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, உலகின் மிக அதிகமான பாதிப்புகள், இறப்புகளை அமெரிக்கா கொண்டுள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவு கரோனா பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details