நியூயார்க் நகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களுடன் மிக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினேன்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. வரும் நாட்களில் இந்த மோதல் தணியும் என நம்புகிறோம்.
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என 2 நாட்டுத் தலைவர்களிடமும் விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன்" என்றார்.
அமெரிக்காவுக்கு ஏழு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சனிக்கிழமை ஹூஸ்டனில் நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டனர். இது உலகளவில் பெரிதும் பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் வைத்து மீண்டும் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவருடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையும் படிங்க:காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: ட்ரம்ப்