அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவலர் சுமார் ஒன்பது நிமிடங்கள் choke hold எனப்படும் கோரப் பிடியில் வைத்திருந்தார்.
இதனால் மூச்சு திணறி, ஜார்ஜ் ஃப்ளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உயிர் இழப்பு, உலகெங்கிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.
இந்தப் போராட்டங்களில் தலைவர்களின் சிலைகளை தேசப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், இத்தாலியில் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கிய பத்திரிக்கையாளராக கருதப்படும் இந்திரோ மொண்டனெல்லி என்பரின் சிலை தேசப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை, லிங்கன் நினைவு மண்டபம், வெள்ளை மாளிகையிலுள்ள தேவாலயம் உள்ளிடவையும் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பொது இடங்களிலுள்ள வரலாற்றுச் சின்னங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், "இது குறித்து பிறப்பிக்கப்படும் உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். ஆனால், இது உத்தரவு சட்டத்தை சீராக நடைமுறைப்படுத்த உதவும்" என்றார்.
முன்னதாக வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது அமெரிக்காவின் ஏழாவது அதிபரான ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவரின் சிலையை சேதப்படுத்த போராட்டகாரர்கள் முயன்றார்கள்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், போராட்டகாரர்கள் மீது பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "அவர்கள் போராட்டகாரர்களே இல்லை. அவர்கள் எல்லோரும் குற்றச்செயல்களில் ஈடுபடும் அராஜகவாதிகள். இவர்களை மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நாங்கள் உதவ தயாராகவே உள்ளோம்" என்றார்.
பொது இடங்களில் இருக்கும் நினைவுச் சின்னங்களை சேதப்படுத்துபவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். அதன்படி நினைவு சின்னங்களை தேசப்படுத்துபவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும்.
இதையும் படிங்க: கரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்பதை ட்ரம்ப் உறுதியாக நம்புகிறார்!