தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நாட்டை வலுப்படுத்த கரோனாவிலிருந்து விரைந்து மீள்வேன் - ட்ரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இச்சூழலில், பல தரப்பிலிருந்தும் வதந்திகள் கிளம்பிய நிலையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். நாட்டை வலுப்படுத்த விரைவில் குணமடைந்து வருவேன்’ என காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

President Donald Trump
President Donald Trump

By

Published : Oct 4, 2020, 1:01 PM IST

வாஷிங்டன் (அமெரிக்கா): அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்க விரைவில் குணமடைந்து திரும்பிவருவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மெலானியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்வேளையில் வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லி நேற்று முன்தினம் (அக்டோபர் 2) இரவு வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் ட்ரம்ப் நலமாக இருக்கிறார். அவருக்கு ‘ரெம்டெசிவர்’ மருந்து அளிக்க மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்தனர். அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அவருக்கு ரெம்டெசிவர் சிகிச்சையை தொடங்க முடிவு செய்தோம். அதன்படி அதிபர் முதல் ‘டோஸ்’ மருந்து எடுத்துக்கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. அதேசமயம், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இச்சூழலில் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் நலமுடன் இருப்பதாகக் கூறியுள்ள ட்ரம்ப், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்க திரும்பி வருவேன் என்று சூளுரைத்துள்ளார். “தான் ஒரு நல்ல வேலையை செய்துள்ளதாகவும், இன்னும் பல படிகள் முன்னேறி அதனை முடிக்க வேண்டியுள்ளது” என்றும் அக்காணொலியில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் கரோனா பேரிடரை மோசமாகக் கையாள்வதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. ட்ரம்ப் - ஜோ பைடன் இடையில் புதன்கிழமை காலை (செப் 30 / இந்திய நேரப்படி) நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முதல் நேரடி விவாதத்தில் கரோனா விவகாரம் பிரதானமானதாக இருந்தது. கரோனா விவகாரத்தில் ட்ரம்ப்பை நேரடியாகவே ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details