வரலாறு காணாத பேரிடராக அமெரிக்காவில் கரோனா பாதிப்பு உருவெடுத்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.44 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 28 ஆயிரத்து 580 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அந்நாட்டின் பொருளாதாரத்தையும் கரோனா வெகுவாக புரட்டிப் போட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பானது அந்நாட்டின் முன்னணி நகரமான நியூயார்க்கை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. அந்நகரில் மட்டும் கரோனாவால் 2.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 11 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.