ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா-தலிபான்கள் இடையே பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதன்விளைவாக, தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டியதாக ஆப்கானிஸ்தானுக்காக அமெரிக்க சிறப்புத் தூதர் சல்மே கலில்சாத் செப்டம்பரில் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டால் செயல்பாட்டிற்கு வரும் நிலையிலிருந்தது. இச்சூழலில், காபூலின் சாஷ் தரக் பகுதியில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, தாலிபான்களை தான் நேரில் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததாகவும், ஆனால் காபூல் தாக்குதலைத் தொடர்ந்து அதனை ரத்து செய்துவிட்டதாகவும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.