அமெரிக்காவின் மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான பாப் வுட்வேர்ட், ரேஜ்(Rage) என்ற பெயரில் புதிய புத்தகம் ஒன்றை செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடவுள்ளார். அதற்கு முன்னர் அந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
அதில், சௌதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய அதிர்ச்சித் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சௌதி அரேபிய அரசை தொடர்ச்சியாக விமர்சித்து எழுதிய செய்தியாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் சௌதி அரேபிய மன்னரான முகமது பின் சல்மானுக்கு தொடர்புடையாதாகக் கூறப்படுகிறது.