தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் பதவி நீக்கம் - John Bolton fired

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டனை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பதவிநீக்கம் செய்துள்ளது அந்நாட்டு அதிகார வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bolton

By

Published : Sep 11, 2019, 11:40 AM IST

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "வெள்ளை மாளிகையில் உங்களது பணி இனி தேவையில்லை என ஜான் போல்டனிடம் தெரிவித்துவிட்டேன்.

அவரது பரிந்துரைகளை நானும், அரசு நிர்வாகமும் தீவிரமாக மறுத்துவந்தோம். என் வற்புறுத்தலின்படி ஜான் போல்டன் தனது ராஜினாமா கடிதத்தை என்னிடம் சமர்ப்பித்துவிட்டார். அவர் ஆற்றிய பணிக்கு மிகவும் நன்றி. அடுத்து வாரம் புதிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யார் என்பதென்று அறிவிக்கப்படும்" என்றார்.

ஈரான், வடகொரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஜான் போல்டன் மறுப்பு தெரிவித்துவந்ததாகவும் அதன் காரணமாகவே அவரை, ட்ரம்ப் பதவி நீக்கம் செய்தார் எனவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அரசு அலுவலர்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பதாக விமர்சனமும் உண்டு.

ABOUT THE AUTHOR

...view details