தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக சுகாதார அமைப்பை விமர்சிக்கும் ட்ரம்ப்

வாஷிங்டன்: கரோனா தொற்றின் தாக்கத்தை உலக சுகாதார அமைப்பு தவறாக கணித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

Trump
Trump

By

Published : Apr 9, 2020, 3:03 PM IST

Updated : Apr 9, 2020, 4:13 PM IST

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனிடையே, கரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு தவறாக கணித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு முதலில் உணர வேண்டும். நோயின் தாக்கத்தை அது தவறாக கணித்துள்ளது. எனவே, இனி அதற்கு நிதி ஒதுக்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால், உலக சுகாதார அமைப்பு அப்படி பார்க்கவில்லை. சீனாவிற்கு ஆதரவாக அது செயல்பட்டுள்ளது" என்றார்.

ட்ரம்ப்

இதற்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், "வைரஸை வீழ்த்த ஒற்றுமையே ஒரே வழி. இதனை அரசியலாக்க வேண்டாம்" என்றார்.

Last Updated : Apr 9, 2020, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details