தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐஃபோன்ல பட்டன் எங்கய்யா? - ட்ரம்ப் புலம்பல்

தான் பயன்படுத்தும் ஐஃபோனில் ஹோம் பட்டன் இல்லாதது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார்.

trump on iphone

By

Published : Oct 26, 2019, 8:11 PM IST

Updated : Oct 28, 2019, 5:54 PM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "டிம் (ஆப்பிள் சிஇஓ), தற்போதுள்ள ஸ்வைப்பை-விட ஐஃபோனின் பழைய பட்டன் முறை எவ்வளவோ மேல்" என்று ட்வீட் செய்துள்ளார்.

தற்போது வெளியாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் Full Screen மாடலாக வெளியாவதால் முன்பிருந்த பட்டன்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. பழைய ஐஃபோன் மாடல்களில் Home என்ற ஒரு பட்டன் இருக்கும், இந்த பட்டன் மூலம் நாம் எந்த செயலியிலிருந்தாலும் எளிதில் Home-க்கு வந்துவிடமுடியும்.

இரு ஆண்டுக்கு முன் வந்த iPhone X மாடலிலேயே இந்த பட்டன் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் தற்போது இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்!

Last Updated : Oct 28, 2019, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details