தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

செய்தியாளருடன் வாக்குவாதம்; இடையிலேயே கிளம்பிய டிரம்ப்...! - டிரம்ப் வாக்குவாதம்

கரோனா வைரஸ் பற்றிய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், கேள்வி எழுப்பிய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

trump-put-chinese-american-reporter-on-the-spot-asks-to-question-beijing-on-virus
trump-put-chinese-american-reporter-on-the-spot-asks-to-question-beijing-on-virus

By

Published : May 12, 2020, 1:39 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரசால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்து 954 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 81 ஆயிரத்து 795 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அதில் அவரிடம் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங் (சீனாவில் பிறந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்) , ''ஒவ்வொரு நாளும் மக்கள் கரோனா வைரஸ்ஸால் உயிரிழந்து வரும் நிலையில், மற்ற நாடுகளை விட அமெரிக்கா தான் கரோனா வைரஸ் பரிசோதனையில் முன்னணியில் உள்ளது என்ற போட்டி மனப்பான்மை ஏன்? இது ஏன் பெரிய விஷயமாக சொல்லப்படுகிறது'' எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப், '' ஒவ்வொரு நாளும் உலகில் பலரும் உயிரிழந்து வருகிறார்கள். அந்தக் கேள்வியை நீங்கள் சீனாவிடம் தான் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்?'' என்றார்.

அதையடுத்து மீண்டும் அதே செய்தியாளர், ''அதை ஏன் என்னைப் பார்த்துக் கூற வேண்டும்?'' என மறுகேள்வி கேட்டார்.

அதற்கு டிரம்ப், ''யார் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும் அவர்களுக்கு இப்படி தான் பதில் கூறியிருப்பேன்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டிரம்ப் சரியாக பதிலளிக்காமல் பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பிலிருந்து வெளியேறினார். இதையடுத்து டிரம்ப்பின் செய்தியாளர் சந்திப்பு சாகசங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details