அமெரிக்காவில் கரோனா பாதிப்பு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.78 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 34 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவலைத் தடுக்க அங்கு லாக் டவுன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் கடும் முடக்கத்தை சந்தித்துள்ளது.
இந்நிலையில் அங்கு நோய் தொற்றை குறைத்து மூன்று கட்டங்களாக லாக் டவுன் விதிகளை தளர்த்தும் வரைவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, முதல்கட்டமாக அங்கு நோய் பாதிப்பில்லாதவர்கள் தக்க முன்னெடுப்புகள், சமூக இடைவெளியுடன் இயங்க வழிவகை செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு விரைந்து குணமாக்கப்படுவார்கள் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.