தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

29 பேருக்கு மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப்!

தேர்தல் பரப்புரைக் குழு முன்னாள் தலைவர் பால் மனாஃபோர்ட் உள்ளிட்ட 28 பேருக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு வழங்கினார். சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லரின் விசாரணையில் தண்டனை பெற்ற இரண்டு பேருக்கும் ட்ரம்ப் தனது அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

29 பேருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்!
29 பேருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்!

By

Published : Dec 24, 2020, 8:22 AM IST

Updated : Dec 24, 2020, 9:02 AM IST

வாஷிங்டன்: தேர்தல் பரப்புரைக் குழு முன்னாள் தலைவர் பால் மனாஃபோர்ட் மற்றும் அவரது உறவினர் சார்லஸ் குஷ்னர் உள்பட 29 பேருக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களின் தண்டனைகளையும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறைத்துள்ளார்.

நவம்பர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சியைத் சேர்ந்த ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கிறார்.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலக உள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்சியின் இறுதிகாலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

நீதிமன்றத்தில் தண்டனை வழங்கினாலும் மன்னிப்பு வழங்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தனது கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் உள்பட 29 பேருக்கு ட்ரம்ப் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இதன்படி, சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லரின் விசாரணையில் தண்டனை பெற்ற இரண்டு பேருக்கும், ஆரம்பகால ஆதரவாளர்களாக இருந்த காங்கிரசின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், ஈராக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் அரசாங்க ஒப்பந்தக்காரர்களுக்கும் ட்ரம்ப் மன்னிப்பு வழங்கினார்.

இதன்மூலம், கடந்த இரண்டு நாள்களில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மொத்தம் 49 பேருக்கு மன்னிப்பு வழங்கியும், தண்டனையைக் குறைத்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வரும் நாள்களில் ட்ரம்ப் மேலும் சிலருக்கு மன்னிப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தடுப்பூசி வந்தாலும் கவனம் தேவை; அமெரிக்க மக்களை எச்சரிக்கும் ஜோ பைடன்

Last Updated : Dec 24, 2020, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details