கரோனா பாதிப்பின் எதிரொலியாக உலகளவில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் சர்வேத சந்தையில் கச்சா எண்ணெய் தேவை வெகுவாகச் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைக்கும் சூழலில், எதிர்காலத் தேவைக்கு பல ஆயிரக்கணக்கான பேரல்களை வாங்கி சேமித்துவைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
கச்சா எண்ணெய்க்காக சர்வதேச நாடுகளை சார்ந்திருப்பதைத் தவிர்க்கும்விதமாக அமெரிக்கா ஷேல் காஸ் உற்பத்தியை மேற்கொள்ளத் தொடங்கியது. தற்போது நிலைமைத் தலைகீழாக மாறி கச்சா எண்ணெய் விலை பாதாளத்தை தொட்டதால் அமெரிக்காவில் ஷேல் காஸ் உற்பத்தியை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் எழுந்துள்ளது.