தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவத் தளபதி மரணம்! - america force killed Qassim Soleimani

வாஷிங்டன்: பாக்தாத்தின் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி கொல்லப்பட்டார்.

Trump ordered killing of Iran Guards commander: Pentagon
அமெரிக்க தாக்குதலில் இரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார்!

By

Published : Jan 3, 2020, 11:18 AM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாக்தாத் விமான நிலையத்தில் இன்று நள்ளிரவில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் எலைட் கட்ஸ் படையின் (Iran's elite Quds Force) ராணுவத் தளபதியும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய உலகின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான கசோம் சுலைமானி (Qassim Soleimani) கொல்லப்பட்டுள்ளார்.

இவருடன் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் ராணுவ கமாண்டர் அபு மஹதி அல் முஹாந்திஸும் இதில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 27ஆம் தேதி ஈராக்கில் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்க படையினர் பலர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ட்ரம்ப் உத்தரவின்பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார்

தாக்குதலை உறுதிசெய்யும் விதமாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க கொடி படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதையும் படியுங்க: அமெரிக்க தூதரகம் சூறையாடல்: கலைந்துசென்ற போராட்டக்காரர்கள்

ABOUT THE AUTHOR

...view details