தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: ட்ரம்ப்

வாஷிங்டன்: இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தான் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

trump imran

By

Published : Sep 24, 2019, 1:18 PM IST

74ஆவது ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது நியூயார்க் சென்றுள்ளார். நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், இருவரும் கூட்டாகச் சேர்ந்த செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் நீங்கள் தலையிட தயாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக இறுக்கிறேன்.

இருநாட்டு பிரதமர்களுடனும் நான் நட்புறவு கொண்டுள்ளேன். மத்தியஸ்தம் செய்வதில் நான் கைதேர்ந்தவனாவேன். அவர்கள் (பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்) ஒப்புக்கொண்டால் காஷ்மீர் சிக்கலை கண்டிப்பாகத் தீர்த்துவைப்பேன்" என்றார்.

மோடி-இம்ரான் சந்திப்பு
காஷ்மீர் விவகாரத்தில் மஸ்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் பலமுறை விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், காஷ்மீர் விவகாரம் என்பது உள்நாட்டுப் பிரச்னை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாகவுள்ளது.

காஷ்மீர் விவகாரம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை மத்திய அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலமானது ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவரும் பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் அந்நாடு அதி தீவிரமாக முயன்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காஷ்மீர் குறித்து மீண்டும் பிரச்னையை எழுப்பவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details