தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

By

Published : Sep 9, 2020, 5:56 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தியதற்காக அடுத்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டியன் டைப்ரிங் -ஜெட்டெ எனும் வலதுசாரி நார்வே அரசியல் தலைவர் தான் டொனால்ட் ட்ரம்பின் பெயரை நோபல் விருதுக்கு பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை காரணமாகதான், ட்ரம்பின் பெயரை தான் பரிந்துரைத்ததாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் ஜெட்டே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலும் கடந்த மாதம் சமாதான உடன்படிக்கை அறிவித்த நிலையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இருநாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவுகளை இயல்பாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரோனா பரவலுக்கு மத்தியில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் ட்ரம்பிற்கு இந்த ஒப்பந்தம் சாதகமானதொரு அம்சமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க :கமலா ஹாரிஸ் அதிபரானால் அது நாட்டிற்கு அவமானம் - அதிபர் ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details