தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்பின் தோல்வி வலதுசாரி தேசியவாதத்தின் தோல்வி அல்ல! - ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் தோல்வியால் வலதுசாரி தேசியவாத கொள்கை தோல்வியடைந்து விட்டதாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

Trump
Trump

By

Published : Nov 12, 2020, 8:58 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பையன் 77 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார். அவருக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்புக்குமான வாக்கு வித்தியாசம் 5 மில்லியன் வாக்குகள் மட்டுமே ஆகும். அதாவது, பதிவான 149 மில்லியன் வாக்குகளில் ட்ரம்ப்பை விட பைடன் 3.4 விழுக்காடு வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் பெற்ற வாக்குகளை விட 1.33 விழுக்காடு வாக்குகளை இம்முறை பைடன் அதிகம் பெற்று உள்ளார். பல்வேறு மாகாணங்களில் மக்கள் வாக்களித்திருப்பதன் மூலம் பைடன் எலக்டரால் காலேஜ் முறையில் முன்னிலை வகித்துள்ளார்.

ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 14 ஆயிரம் வாக்குகள் மட்டுமே ஆகும். அதேபோல், பென்சில்வேனியா மாகாணத்தில் இருவருக்குமான வாக்கு விழுக்காடு வித்தியாசம் 0.7 விழுக்காடு மட்டுமே ஆகும். அரிசோனா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் பைடன், ட்ரம்ப் ஆகியோருக்கிடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது.

47.6 விழுக்காடு மக்கள் ட்ரம்புக்கு வாக்களித்ததன் மூலம், பிற்போக்கு தனமான கருத்தாக்கமும் வலதுசாரி தேசியவாதமும் தோல்வி அடைந்ததாக கருத முடியாது. இருப்பினும், குடியரசுக் கட்சி வெற்றி பெற்ற மாகாணம் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்ற மாகாணம் என தனித்துப் பார்க்க மாட்டேன் ஒன்றிணைந்த அமெரிக்காவாகவே பார்ப்பேன் என பைடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details