தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விண்வெளி வீராங்கனையிடம் நடு விரலைக் காட்டிய அதிபர் மீது குற்றச்சாட்டு! - Trump latest

தான் செய்த பிழையை சரி செய்த விண்வெளி வீராங்கனையை நோக்கி நடு விரலைக் காட்டியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது புகார் எழுந்துள்ளது.

Trump

By

Published : Oct 24, 2019, 2:37 AM IST

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான ஜெசிகா மீர், சகா கிறிஸ்டினா கோச் ஆகியோருடன் வீடியோ அழைப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அதிபர், "இரண்டு துணிச்சலான அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் பேசுவதில் பெரும் மகிழ்ச்சி. விண்வெளி நிலையத்திற்கு வெளியே பெண் நடப்பது இதுவே முதல் முறை" என்று தெரிவித்தார்.

விண்வெளி நிலையத்திலிருந்த ஜெசிகா மீர், விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஒரு பெண் நடப்பது இது முதல்முறை அல்ல என்றும் இரண்டு பெண்கள் ஒரே நேரத்தில் நடப்பதுதான் முதல்முறை என்று அமெரிக்க அதிபர் செய்த பிழையை சுட்டிக்காட்டினார். இதில் கடுப்பான ட்ரம்ப், நடுவிரலைக் கொண்டு தனது நெற்றியைத் தேய்த்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபரின் இந்த செய்கை பெண் விண்வெளி வீராங்கனை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போல உள்ளதாக ட்விட்டரில் பலரும் அமெரிக்க அதிபருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பிரிட்டன் வெளியேறுவதில் நீடிக்கும் குழப்பம்!

ABOUT THE AUTHOR

...view details