தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்ப்-கிம் சந்திப்பைத் தொடர்ந்து, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு: பாம்பியோ

வாஷிங்டன்: அமெரிக்கா-வடகொரியா இடையே முடங்கிக்கிடக்கும் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை, இம்மாதத்துக்குள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

trump

By

Published : Jul 1, 2019, 9:48 AM IST

ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, நேற்று தென் கொரியா சென்றிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென் கொரியா - வடகொரியா எல்லையில் வைத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனால், அமெரிக்கா-வடகொரிய இடையே முடங்கிக்கிடக்கும் அணு ஆயுத பேச்சுவார்த்தை, ஜூலை மாதத்தில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"ஜூலை மாதம், அதாவது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இருநாடுகளும் அணு ஆயுத பேச்சுவார்த்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இது எங்கு நடைபெறும் என்பது இனிதான் உறுதி செய்யப்படும்" என பாம்பியோ கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது.

ஹானாய் உச்சி மாநாடு:

2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த முதல் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹனாயில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இரண்டாவது முறையாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும், இச்சந்திப்பில் எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று வட-தென் கொரிய எல்லையில் ட்ரம்பும், கிம்மும் மூன்றாவது முறையாகச் சந்தித்தது, இருநாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும், வடகொரியா எல்லையில் முதல்முறையாக அமெரிக்க அதிபர் (ட்ரம்ப்) ஒருவர் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும்.

ABOUT THE AUTHOR

...view details