அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன.
இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாயாராகிவருகிறது.
இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் தாயாரானவுடன் அமெரிக்காவுக்கு வந்து அதில் கையெழுத்திடுமாறு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த ஆசியன் உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், "முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாயாரானவுடன் அமெரிக்காவுக்கு வந்து அதில் கையெழுத்திடுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் வாசிங்க :பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா!
அமெரிக்க-சீனா இடையேயான நல்லுறவு இருநாட்டுக்கு மட்டுமின்றி, இந்த உலகத்துக்கும் இப்பிராந்தியத்துக்கும் (கிழக்கு ஆசியா) நன்மையாக அமையும்" எனக் கூறினார்.