தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிரடி காட்டும் டிரம்ப்: அதிகரிக்கும் அமெரிக்க- சீன பதற்றம்! - சீன நிறுவனங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க முதலீட்டாளர்கள் சீனாவின் ராணுவத்தை ஆதரிக்கும் சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கும்  நிர்வாக ரீதியான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அதிரடி காட்டும் டிரம்ப்... அதிகரிக்கும் அமெரிக்கா- சீனா பதற்றம்!
அதிரடி காட்டும் டிரம்ப்... அதிகரிக்கும் அமெரிக்கா- சீனா பதற்றம்!

By

Published : Nov 13, 2020, 4:58 PM IST

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்த உத்தரவு, அமெரிக்கா-சீனா இடையே நீடித்துவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன் வெளிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க முதலீட்டாளர்களின் மூலதனத்தைப் பயன்படுத்தி சீன பாதுகாப்பு மற்றும் மக்கள் விடுதலை ராணுவத்தின் (பி.எல்.ஏ.) உளவுத் துறை சேவைகளை மேம்படுத்துவதிலிருந்து அமெரிக்கர்களை பாதுகாக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் சீன ராணுவ நிறுவனங்களுக்கு நிதியளிப்பதிலிருந்து அமெரிக்க முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நிறைவேற்று ஆணையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு ஜனவரி 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதிபரின் இந்த நடவடிக்கை அமெரிக்க முதலீட்டாளர்களின் மூலதனத்தை, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், மக்கள் குடியரசு புலனாய்வு சேவைகளின் திறன்களை மேம்படுத்துவதிலிருந்து பாதுகாக்கிறது.

இந்த நிறுவனங்கள் பல உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதால், அமெரிக்காவில் உள்ள தனிப்பட்ட முதலீட்டாளர்கள் அறியாமல் பரஸ்பர நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற மூலதனத்தை முதலீடு செய்கிறார்கள். அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்கு அதிபர் டரம்ப் அதிக முன்னுரிமை கொடுகிறார்” என்று ஓ. பிரையன் தெரிவித்துள்ளார்.

சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்துதல், "இரட்டை பயன்பாடு" சிவில்-ராணுவ ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துதல், அதிகமான சீன பயன்பாடுகளைத் தடைசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details