அமெரிக்காவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்வது தொடர்பாக தற்போதைய அரசுக்கும், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்குமிடையே வார்த்தைப்போர் நிலவிவருகிறது. கரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் தாக்கமானது அமெரிக்காவில் அதிதீவிரமாக உள்ளது. உலகிலேயே அதிக பாதிப்பு கொண்ட நாடாகவும், அதிக கரோனா உயிரிழப்பு கொண்ட நாடாகவும் அமெரிக்கா இருக்கிறது.
இந்தச் சூழலுக்கு முன்தைய ஒபாமா அரசின் பொறுப்பின்மையே காரணம் என அதிபரின் வெள்ளை மாளிகை பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது. இதையடுத்து இதற்குப் பதில் கூறிய ஒபாமா, நாட்டின் தலைமையில் இருக்கும் அதிபர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்படுவதாகத் தெரியவில்லை எனவும், அவர்கள் பெயரளவிலேயே பொறுப்பிலிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.