பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்கா செல்கிறார். இதில் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடக்க இருக்கும் ஹவுடி மோடி (Howdy Modi) நிகழ்ச்சியில் ட்ரம்புடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்கிறார்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் புதிய அறிவிப்பு -டொனால்ட் ட்ரம்ப்! - டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அங்கு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவுள்ளார்.
![ஹவுடி மோடி நிகழ்ச்சியில் புதிய அறிவிப்பு -டொனால்ட் ட்ரம்ப்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4492543-thumbnail-3x2-modi.jpg)
Trump hints at announcement during 'Howdy Modi'
50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்புகளை அறிவிக்கவுள்ளார். ஆனால் அறிவிப்புகள் எதைப் பற்றியானது என்ற தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் பெரிய மாகாணமான டெக்சாஸில் இந்தியர்கள் அதிகம். அதனால் இந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை குறிவைத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Sep 20, 2019, 10:50 AM IST