அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் மில்லர் இனி பாதுகாப்புத் துறை செயலராக பணியாற்றுவார். அவருக்கு உறுதுணையாக துணை பாதுகாப்புத் துறை செயலர் டேவிட் நார்குஸ்ட் செயல்படுவார்.
பாதுகாப்புத் துறை செயலரை பணிநீக்கம் செய்த ட்ரம்ப் - பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர்
வாஷிங்டன்: தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளார்.
Trump fires Defence Secretary Esper
மார்க் எஸ்பர் பணிநீக்கம் செய்யப்படுகிறார். அவர் இத்தனை நாட்கள் பணி செய்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டங்களை அடக்க அதிரடி படையை களமிறக்க ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்கு எஸ்பர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் இந்தப் பணிநீக்க நடவடிக்கையின் பின்னணி என கூறப்படுகிறது.