கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகளவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
மேலும் அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேசெல்கிறது எனத் தெரிவித்துள்ளார்.