தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிவைத்து தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்! - trump diwali celebration

அமெரிக்கா: தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Trump

By

Published : Oct 26, 2019, 11:04 AM IST


தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் புனிதமான காலம் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள் அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் வசிக்கிறார்கள்; அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இருளை ஒளி வெல்ல வேண்டும்: தீமையை நன்மை வெல்ல வேண்டும்: அறியாமையை ஞானம் வெல்ல வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

இந்தப் புனித காலத்தில் மக்கள் வீடுகளில் தீபத்தை ஏற்றிவைத்து உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்று கூறிய ட்ரம்ப், அனைத்துத் தரப்பு மக்களின் சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாரக் ஒபாமா அதிபரான காலத்திலிருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தீபாவளி: 20 பெண்கள் இணைந்து தயாரிக்கும் சுவையான சிறுதானிய வகை பலகாரங்கள்!

ABOUT THE AUTHOR

...view details