இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி விமானம் மூலம் வாசிங்டன் விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஜெர்மனியில் உள்ள ரைன்லேண்ட் - பாலாடினேட் மாகாணத்தில் இறங்கும் அவர்கள், அங்கிருந்து இந்திய நேரப்படி நாளை காலை 4:30 மணிக்குப் புறப்படவுள்ளனர். மதியம் 12:30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்தடையும் அவர்களை, பிரதமர் மோடி வரவேற்கவுள்ளார்.