அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்குதல் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தேசிய சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் முழு அதிகாரமும் பயன்படுத்தும் வகையில், கொரோனா வைரஸூக்கு எதிரான சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக, 50 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் தற்போது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.