கரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக நியூயார்க்கில் இதுவரை 52 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய பகுதிகளைத் தனிமைப்படுத்த ஆலோசனை நடத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில், ''நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய பகுதிகளைத் தனிமைப்படுத்த ஆலோசித்துவருகிறேன். விரைவில் அந்த முடிவு வெளியாகும்.