அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு கட்சியினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில், அதிபர் ட்ரம்பிற்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப், கடந்த வாரம் வீடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனிமையில் இருந்து வந்த ட்ரம்பிற்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில், அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது பரப்புரைக் கூட்டங்களில் தற்போது பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தான் பங்குபெற்ற பரப்புக்ரை கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப், "இதுதான் ஒரு வினோதமானத் தேர்தல்! அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றின் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன். நான் தோற்றால், இப்படியொரு மோசமான வேட்பாளருக்கு எதிராக எப்படித் தோற்றீர்கள் என்ற கேள்வி எழும்.