தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஆப்கான் ஆட்சி கவிழ்ப்பு: ஜோ பைடன் பதவி விலக வேண்டும்' - டோனால்ட் டிரம்ப்

தாலிபன் தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

Donald Trump
Donald Trump

By

Published : Aug 16, 2021, 1:01 PM IST

வாசிங்டன்:ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டனர். தற்போது அதிபர் மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே, அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப், ஆப்கான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளை ஜோ பைடன் வெளியேற்றியதன் காரணமாக தாலிபன்கள் ஆட்சியை பிடித்துவிட்டனர். இதற்கு முழு பொறுப்பு பைடன்தான். எனவே தாலிபன் தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் கோவிட் -19 பரவல், எல்லை பிரச்னை, பொருளாதார நலிவு ஆகியவற்றுக்கு அவரே காரணம்" எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்க படையெடுப்பால், வீழ்த்தப்பட்ட தாலிபன்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானை கைப்பற்றி உள்ளனர்.

ஆப்கானிலிருந்து, அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படும் என்று பைடன் அறிவித்திலிருந்து தாலிபன்கள் தாக்குதல் அதிகரித்துவிட்டன. அமெரிக்கப் படைகள் முழுவதும் செல்வதற்கு முன்பாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இதையும் படிங்க:’ஆப்கானிலிருந்து படை விலகும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை’ - ஜோ பைடன்

ABOUT THE AUTHOR

...view details