அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் களத்தின் முக்கிய நிகழ்வு நாளை (அமெரிக்க தேதிப்படி செப்.29) தொடங்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் அதிபர் வேட்பாளர்களின் முதல் பொது விவாதம் அந்நாட்டின் க்ளீவ்லாந்த் நகரில் நடைபெறுகிறது.
இதில், குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் நேரடி விவாதம் மேற்கொள்ள உள்ளனர். இந்த விவாதத்தின் நெறியாளராக பாக்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஸ் வாலாஸ் செயல்பட உள்ளார்.