தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவிலும் பிளாஸ்மா சிகிச்சை - ட்ரம்ப் அரசு ஒப்புதல் - பிளாஸ்மா சிகிச்சை

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க ட்ரம்ப் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Trump
Trump

By

Published : Aug 25, 2020, 3:02 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகெங்கும் மோசமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொற்றின் தீவிரம் குறையவில்லை.

கரோனா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் சோதனை அடிப்படையில் பல சிகிச்சை முறைகளை முயன்றுவருகின்றன.

அதன்படி இந்தியாவில் முதல்முறையாக டெல்லியில் பிளாஸ்மா முறையில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த முறையில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படும். இந்த பிளாஸ்மா கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் நபரின் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் உடலில் எளிதாக ஆன்ட்டிபாடி உற்பத்தியாகும்.

இருப்பினும், இந்தச் சிகிச்சை முறையில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதன் காரணமாக இந்த சிகிச்சை முறையை அனைத்து நாடுகளும் பின்பற்றுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க ட்ரம்ப் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: சிஏஏ, என்ஆர்சி விவகாரங்களின் நிலைப்பாடு - கமலா ஹாரிஸுக்கு ஆதரவும்...! எதிர்ப்பும்...!

ABOUT THE AUTHOR

...view details