இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் பேசுகையில், ''அடுத்த 60 நாள்களுக்கு ஈரானுக்கு புதுப்பிக்கப்பட்ட நான்கு அணுசக்திக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அணுசக்தி திட்டத்தை அமெரிக்கா கூர்மையாக கவனித்து வருவதால், இந்தக் கட்டுப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் தகர்த்தப்படும்.
அணு ஆயுதம் வைத்துக்கொள்ள ஈரானுக்கு எப்போதும் அனுமதியில்லை. ஈரானின் அணுசக்தி தொடர்பான திட்டங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதால்தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன'' என்றார்.
2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. அதையடுத்து தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்தது.
இந்நிலையில் ஈரானுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுத்தும் வகையில், ஏவுகணை மற்றும் அணு சக்தி நடவடிக்கைளைத் தடுக்க பல்வேறு வழிகளில் அமெரிக்க தனது பிடியை இறுக்கியது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது ஈரான் மீது புதுப்பிக்கப்பட்ட நான்குக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளதாக பலர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: ஈரான் கடும் எச்சரிக்கை