தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி முடிவு: இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம்! - எஃப்-1 விசா இந்தியா மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நடைபெற்றுவரும் இணையவழி வகுப்புகள் தொடருமேயானால், அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க முகமை தெரிவித்துள்ளது.

indian students should leave US trump
indian students should leave US trump

By

Published : Jul 7, 2020, 11:51 AM IST

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, இணையவழி மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நடைபெற்றுவரும் இணையவழி வகுப்புகள் தொடருமேயானால், அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என அமெரிக்கக் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த முகமை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "பல்கலைக்கழகம், கல்லூரிகள் நடத்தப்படும் இணையவழி வகுப்பு வரும் இலையுதிர் காலத்திலும் தொடருமேயானால், எஃப்-1, எம்-1 விசாவுடன் அங்கு பயிலும் மாணவர்கள் அமெரிக்காவில் இருக்க அவசியமில்லை" என்றார்.

இது வெளிநாட்டு மாணவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து என்ன செய்வதென்று தெரியாமல் உயர்கல்வி நிறுவனங்கள் குழம்பிப்போயுள்ளன. இதுகுறித்து குடியேற்ற விவகாரத்துக்கான அரசு வழக்கறிஞர் சைப்பிரஸ் மெஹ்தா கூறுகையில், "இந்தப் புதிய கொள்கை மூன்று விஷயங்களைத் தெளிவுப்படுத்துகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முழுமையாக இணையவழியில் கற்க விரும்பினால், அவர்களுக்கு எஃப்-1 விசா மறுக்கப்படும்.

எஃப்-1 விசாவுடன் அமெரிக்காவுக்குள் அவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படும். இலையுதிர் காலத்தில் தொடங்கும் செமஸ்டரில் எஃப்-1 விசா வைத்துக் கொண்டு வெளிநாட்டு மாணவர்கள் பயில இயலாது" என்றார்.

இதனால் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றுவரும் இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் முகக் கவசம் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details