கரோனா பாதிப்பு உலகளவில் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னேறிய நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்கூட இதன் தாக்கத்தால் வேலையின்மை அதிகரித்துவருகிறது.
பொருளாதார பெருஞ்சக்திகளாகக் கருதப்படும் ஜி7 நாடுகளில் ஒன்றான கனடாவிலும் கரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதுவரை சுமார் 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முடக்கத்தில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் விதமாக, 2.2 பில்லியன் கனடா டாலர் நிதிச்சலுகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், லாக்டவுனிலிருந்து மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும். குறிப்பாக நகரங்களின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த நிதி பெரிதும் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புதினின் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டத் திருத்தம்!