கரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகத்தின் இயக்கத்தையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது. பரவலைத் தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அச்சத்துடனே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். சில நாடுகளில் தொற்றின் இரண்டாம் அலை உருவாகிவருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இணையம் இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கிறது.
மாணவர்களின் படிப்பாகட்டும் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதாகட்டும் அனைத்திலும் தற்போது இணையம் மிக முக்கியப் பங்காற்றிவருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கனட மக்களுக்கு தங்கு தடையின்றி அதிவேக இணைய சேவையை வழங்க அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளார். அதன்படி, 1.35 பில்லியன் டாலர் மதிப்பில் அந்நாட்டைச் சேர்ந்த சாட்டிலைட் நிறுவனமான டெலிசாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.