நாசா விண்வெளி வீரர்களான கிறிஸ் காசிடி, ரோஸ்கோஸ்மோஸின் அனடோலி இவானிஷின், இவான் வாக்னர் ஆகிய மூவரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் செய்தனர். சுமார் ஆறு மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நாசா வீரர்கள், தற்போது சோயுஸ் காப்ஸ்யூல் மூலம் இன்று (அக்.22) காலை 7:54 மணியளவில் டிஜெஸ்காஸ்கன் நகரின் தென்கிழக்கில் கஜகஸ்தானில் தரையிறங்கினர்.
விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிய நாசா வீரர்கள்... உற்சாக வரவேற்பு!
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாத சுற்றுப்பயணத்தை முடித்த மூன்று நாசா விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
asa
மூவரும் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, வீடுகளுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா அச்சம் நிலவி வருவதால், வீரர்களை அழைத்து வர சென்ற ரஷ்யா மீட்பு வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமின்றி, மீட்பு வீரர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டுள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடிந்து வந்த வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Last Updated : Oct 22, 2020, 1:42 PM IST