அமெரிக்காவின் வடமேற்கு அயோவா (Iowa) நகரமான சிபிலியில் நேற்று அந்நாட்டு நேரப்படி மதியம் 2 மணியளவில், சரக்கு ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது.
சுமார் 47 பெட்டிகள் தடம் புரண்டதில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இவ்விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காணப்பட்டது
இவ்விபத்தில் ரயில்வே ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், ரயிலில் வெடி பொருட்களில் பயன்படுத்தக்கூடிய அமோனியம் நைட்ரேட் ஏற்றிச் செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமோனியம் நைட்ரேட்டுடன் தடம் புரண்ட சரக்கு ரயில் இதன் காரணமாக, உடனடியாக 5 கிமீ., சுற்றளவில் உள்ள மக்களை வெளியேறும்படி அலுவலர்கள் உத்தரவிட்டனர். கிட்டத்தட்ட, 3 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
உடனடியாக, அண்டை நகரங்களான ஆஷ்டன், லிட்டில் ராக், மெல்வின், ஓச்சீடன், ஷெல்டன் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.