ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கரோனா இணைய பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சைபர் குற்றம் குறித்த விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, உலகில் பெரும்பாலான நாடுகள் இன்னும் இணைய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
குறிப்பாக, 90 நாடுகள் சைபர் பாதுகாப்பு விவகாரத்தில் முதல்கட்ட பணிகளைக் கூட தாண்டவில்லை. தற்போது சர்வதேச சமூகம் கரோனா பெருந்தொற்றால் சிக்கித் தவித்துவரும் சூழலில், போலி மின்னஞ்சல் மூலம் நிகழும் குற்றங்கள் தற்போது 600 மடங்கு அதிகரித்துள்ளது.