தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். முன்னதாக லண்டன் சென்று தொழில் முதலீடுகளுக்காக அழைப்பு விடுத்திருந்த அவர், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கன்றுக்கு தீவனம் கொடுத்த முதலமைச்சர் ஈபிஎஸ்! - வெளிநாட்டு முதலீடுகள்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில், அங்குள்ள பஃபல்லோ நகரில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசலில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்படவுள்ள உலகத் தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கான கட்டமைப்பு வசதிகள் பற்றி அரசு சார்பில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பஃபல்லோ நகரின் கால்நடைப் பண்ணையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பற்றி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பண்ணையில் இருக்கும் பசுக்கன்றுகளுக்கு தனது கையால் தீவனங்களை அளித்து தடவிக்கொடுத்தார். பசுக்கன்றுக்கு முதலமைச்சர் அன்போடு தீவனம் அளிக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.