உலகளவில் பிரபலமான சீனாவின் டிக்-டாக் செயலிக்கு, இந்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த அதிரடி முடிவை பல நாட்டின் அலுவலர்கள் பாராட்டினர். இந்நிலையில், அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்-டாக் செயலியை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
'டிக்-டாக் மைக்ரோசாப்டால் வாங்கப்படுமா... அமெரிக்காவில் தடையா இல்லையா' திடீரென்று வெளியான முக்கிய தகவல்! - New Delhi-based think-tank
டெல்லி: டிக்-டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அமெரிக்க அதிபருடன் தொலைப்பேசியில் உரையாடினார். அதில், பல முக்கிய முடிவுகள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சத்யா நாதெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவின் டிக்-டாக் செயலி வாங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்" எனக் குறிப்பிட்டிருந்தார். டிக்-டாக்கை வாங்க வேண்டும் என்றால் அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் எனவும் அதிபர் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், டிக்-டாக்கின் இந்தியா தலைவர் நிகில் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்திய பயனர்களின் தகவல்களை நாங்கள் எந்த வெளிநாட்டு அரசாங்கங்களுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் அத்தகைய தரவுகளை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. எதிர்காலத்தில் தரவுகளை யாரேனும் கேட்டாலும், நிச்சயமாக அளிக்க மாட்டோம் என உறுதியளிக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.