வாஷிங்டன்: விற்பனை பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு டிக்டாக் நிறுவனத்துக்கு கூடுதலாக 15 நாள்கள் அமெரிக்க அரசு வழங்கியதாக, அந்நிறுவனம் அந்நாட்டின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கருவூலத் துறை செய்தித் தொடர்பாளர் மோனிகா வெளியிட்ட அறிக்கையில், 'இந்த 15 நாள்கள் நீட்டிப்பு என்பது டொனால்ட் ட்ரம்பின் ஆணைக்கிணங்க, வெளிநாட்டு முதலீட்டுக் குழுவிற்கும் (CFIUS) கட்சிகளுக்கும் இடையிலான தீர்ப்பதற்கு கூடுதல் நேரத்தை உருவாக்கியிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி, ட்ரம்ப் அரசு டிக்டாக் மற்றும் பைட் டான்ஸ் நிறுவனங்களுடனான வணிக உறவை, நாட்டின் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி முறித்தது மட்டுமில்லாமல், அந்தச் செயலிகளுக்குத் தடையும் விதித்தது.
அதேபோல், ஆகஸ்ட் 14ஆம் தேதி, பைட் டான்ஸ் நிறுவனம் இன்னும் 90 நாள்களில் விற்பனை செய்துவிட்டோ அல்லது மூடிவிட்டோ போய்விட வேண்டும் எனவும் அதற்கான இறுதி நாளாக நவம்பர் 12 இருக்கும் எனவும் ட்ரம்ப் அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இருந்தபோதிலும், செப்டம்பர் மாதம் ட்ரம்ப், இந்த பைட் டான்ஸ் நிறுவனத்தை அமெரிக்கர்களிடம் விற்றுவிட்டுச் செல்ல வேண்டும் எனத் தளர்வுகளுடன் கூடிய அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து பைட் டான்ஸ் நிறுவனம், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், அமெரிக்க நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் எந்தவொரு நகர்வையும் செய்யாமல் அமைதி காத்தது.
முன்னதாக டிக்டாக் அறிவித்த அறிக்கையில், அமெரிக்க அரசு ஆரம்பத்தில் 30 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கியது.
ஆரம்பத்தில் டிக்டாக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசு டிக்டாக் நிறுவனத்தை 30 நாள்கள் அந்நாட்டில் இருக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவைத்தது. ஏனெனில், டிக்டாக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய விற்பனை வேண்டுதல்களைப் பெற்றுக்கொண்டு இருப்பதே அதற்குக் காரணம்.
இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தகத் துறை டிக்டாக்கை தடைசெய்வதற்கான முடிவை எடுக்காது என பென்சில்வேனியா கிழக்கு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இது குறித்து அக்டோபர் 30ஆம் தேதி பேசிய அமெரிக்க நீதிபதி வெண்டி பீட்டில்ஸ்டோன் அமெரிக்க அரசு வெளிப்படுத்திய பாதுகாப்பு குறித்த அச்சம் அபரிமிதமானது என்று தெரிவித்தார்.