அமெரிக்காவின் நியூயார்க் ப்ராங்ஸ் வன உயிரியல் பூங்காவில் நான்கு வயதான மலயன் புலி உள்ளது. இந்தப் புலிக்கு நடியா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புலிக்கு கடந்த (மார்ச்) மாதம் 27ஆம் தேதி கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புலிக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது தற்பேது உறுதியாகி உள்ளது. பொதுவாக கரோனா தொற்று விலங்குகளை பாதிப்பது இல்லை என இதுவரை அறியப்பட்டு வந்தது.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக புலி ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வன உயிரியல் பூங்காவின் இயக்குனர் ஜிம் பெர்கனி கூறுகையில், இது தனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை.
அமெரிக்காவில் புலிக்கு கரோனா புலிக்கு எவ்வாறு கரோனா தொற்று பரவியது என்பதை ஆராய்ச்சி நடத்திவருகிறோம்” என்றார். இந்நிலையில் கரோனா தொற்று வன விலங்கான புலிக்கு பரவியது எப்படி என்பது குறித்து நாங்களும் ஆராய்ச்சி நடத்திவருகிறோம் என வனவிலங்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் குழந்தைகள் முதல் முதியவர் வரை என கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூகான் பகுதியில் முதலில் அறியப்பட்ட கரோனா பெருந்தொற்றுக்கு இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் விலை கொடுத்து வருகின்றன.