தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரிலையன்ஸ் குழுமத்துடன் கைகோர்க்க இருக்கும் ‘டிஃபானி’ - ரிலைன்ஸ் குழுமம்

புகழ்பெற்ற அமெரிக்க ‘டிஃபானி’ நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து தனது முதல் கிளையை டெல்லியில் திறக்கவுள்ளது.

டிஃபானி

By

Published : Aug 8, 2019, 6:37 PM IST

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான வைர நகைகளைத் தயாரிக்கும் நிறுவனம் ‘டிஃபானி’. மிக விலை உயர்ந்த வைரங்களைப் பிரத்யேகமாக திருமணங்களுக்கு ஏற்றவாறு மோதிரங்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து இளம் பச்சை நிற டப்பாக்களுக்குள் அடைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ‘டிஃபானி’ நிறுவனத்தின் சிறப்பு.

‘டிஃபானி’ நிறுவனம் 25 நாடுகளில் 320 நகைக்கடைக் கிளைகளை நிறுவி வெற்றிகரமாக நடத்திவருகிறது. மேலும், 14 ஆன்லைன் வர்த்தக இணையதளங்களையும் வைத்துள்ளது.

தற்போது, ‘டிஃபானி’ நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து தனது முதல் இந்தியக் கிளையை டெல்லியில் திறக்கவுள்ளது.

இது குறித்து டிஃபானி’ நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை பிரிவின் துணைத் தலைவர் பிலிப் கல்டி கூறும்போது, ‘இந்தியாவில் நாங்கள் கால்தடம் பதிக்கவுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயம். உலக நாடுகளில் இந்திய விற்பனை சந்தை மிகவும் முக்கியமானது. ‘டிஃபானி’ நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற வடிவமைப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துவோம்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details