வாஷிங்டன் (அமெரிக்கா): அமெரிக்காவில் உளவுத்துறையில் பணியாற்றும் 20 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட அலுவலர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது.
அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் ஜோ பைடன் அரசு ஆணையிட்டுள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்க அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியத் துறையான உளவுத்துறையின் 20 விழுக்காட்டிற்கும் மேலான அலுவலர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.